தீர்வு கிடைக்கா விட்டால் போராட்டம் வேறு மாதிரியாக அமையும் வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள்
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கட்டிடத்தில் (09.10.2017) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே மேற்கண்டவாறு வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் தலைவி சிவகரன் சுகந்தி தெரிவித்தார்.
நாங்கள் வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் எங்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக கடந்த பல மாதங்களாக வடக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். பல தடவைகள் எங்களுடன் தொடர்புபட்ட மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டதுடன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கும் சென்றிருந்தோம்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வடக்கிலுள்ள சுகாதாரத் தொண்டர்களின் விபரங்களை ஆளுநர் தரப்பிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் இன்று வரையும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் எங்களுக்கு ஒரு உறுதிமொழி வழங்கியிருந்தார் ஒரு மாதத்திற்குள் எமது நியமனத்தை வழங்குமாறு தற்போது இரண்டரை மாதங்கள் கடந்த நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், வீதியில் கடந்த 118நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தோம். எனினும் ஆக்கபூர்வமான எவ்வித இறுதி முடிவும் கிடைக்காத பட்சத்தில் புதிய வடக்குமாகாண சுகாதார அமைச்சர் எங்களிடம் வந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட ஐந்து தீர்மானங்களுக்கும் அமைவாகவும் நாங்கள் எமது குடும்ப நிலைமைகள் காரணமாக எமது போராட்டத்தினை தொடரமுடியாத காரணத்தினால் எங்களுடைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை இடைநிறுத்தியிருந்தோம். இருந்தும் கடந்த 45நாட்களாக அவரவர்கள் தத்தமது மாவட்டங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் முதலமைச்சரையும் சந்தித்திருந்தோம். அதேபோல ஆளுநரையும் சந்தித்து எமது விடங்கள் தொடர்பாக மீண்டும் தெரியப்படுத்தியிருந்தோம். வடமாகாண சுகாதார அமைச்சரைச்சந்தித்திருந்தோம். அதேபோல வடக்கு மாகாணங்களில் திறந்துவைக்கப்பட்ட சுகாதாரத்திணைக்களங்களின் அலுவலகங்களைதிறந்து வைப்பதற்கு வந்த மத்திய சுகாதார அமைச்சரையும் சந்தித்து இது விடங்கள் தொடர்பாக தெரிவித்திருந்தோம்.
அவர் தெரிவிக்கும்போது அந்தந்த மாவட்டங்களிலுள்ள அதிகாரிகள் தான் இது தொடர்பாக கவனம் எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல ஆளுநரும் கடந்தவாரம் தெரிவித்துள்ளார் வடமாகாண அமைச்சரவையின் வாரியத்தினூடாகவே இவ்விடயங்களை கொண்டு செல்ல முடிவதுடன் அதற்கான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது மத்திய அரசாங்கத்தினால் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் என்றபோர்வையில் வடக்கு மாகாணத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கூடாகவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு 50டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களை தற்போது நியமித்துள்ளார். தற்போது எங்களுடைய கேள்வி என்னவென்றால் வடக்குமாகாணத்தில் யுத்த காலத்திலிருந்து 1992ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இன்று வரையும் சம்பளம் இன்றி வேலை செய்து வருகின்றோம். எங்களை உள்வாங்கவில்லை. அதேநேரம் அரசியல் செல்வாக்கினால் இந்த 50பேரும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இதைவிட இன்னும் பலரை இச்சேவைக்கு நியமிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் எங்களுக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் பல காலமாக போராடி வருகின்றோம். எங்களை விடுத்து நேரடியாக அவர்களைத் தொடர்புகொண்டு அலைபேசியூடாக அவரசமான ஒரு தீர்மானத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அவர்களை உட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இத்திட்டத்திற்கு எங்களை ஏன் உள்வாங்கவில்லை என்பதே எங்களுடைய கேள்வியாக இருக்கின்றது. இதற்கு எதிர்ப்புப் தெரிவித்து எதிர்வரும் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கும் எங்களுக்கு சரியான பதில் கிடையாவிட்டால் எமது போராட்டத்தினை வேறுமாதிரியான முறையில் மேற்கொள்வதற்கு நாங்கள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சசிகரன் வவுனியா-

Reviewed by Author
on
October 10, 2017
Rating:
Reviewed by Author
on
October 10, 2017
Rating:

No comments:
Post a Comment