வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தால் வழங்கப்படும் வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கும் வரட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதேச செயலக வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த தோணிக்கல், தேக்கவத்தை கிராம மக்கள் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த போது தமக்கு பதில் தந்து விட்டு செல்லுமாறு வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து அப்பகுதி கிராம அலுவலரை அழைத்த பிரதேச செயலாளர் மக்களுக்கு ஏன் வரட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துமாறு கோரியதுடன், மக்கள் சார்பாக மூவரை அழைத்து அலுவலகத்தில் இது தொடர்பில் பேசியிருந்தார்.
இருப்பினும் அப்பேச்சுக்களில் திருப்தியடையாத மக்கள் பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகத்தை அடைந்து அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இதன்போது மாவட்ட செயலக வாயிலை மக்கள் மறிக்க முற்பட்ட போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மக்களுடன் பேசி அவர்களை சமரசம் செய்திருந்தனர்.
அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, இது தொடர்பில் விசாரணை செய்து நாளைய தினம் பதில் வழங்குவதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தமது கிராமத்தில் வறுமையால் பாதிக்கப்பட்வர்கள், 70 இற்கும் மேற்பட்ட விதவை குடும்பங்கள் எனப் பலர் இருந்தும் வரட்சி நிவாரணம் தமக்கு வழங்கப்படவில்லை எனவும், அயல் கிராமங்களில் பரவலாக வரட்சி நிவாரணம் வழங்கப்பட்ட போதும் தமது கிராமத்திற்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், கிராம அலுவலரை உடனடியாக இடமாற்றுமாறும் தெரிவித்திருந்தனர்.

Reviewed by NEWMANNAR
on
October 12, 2017
Rating:

No comments:
Post a Comment