போருக்கு தயாராகிறதா சவுதி? 110 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பு -
அமெரிக்காவின் பிரபலமான இரண்டு நிறுவனங்களிடம் இருந்து சவுதி அரேபியா $110 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் சவுதி இடையே கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ள சூழலில் இந்த தகவல் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
அமெரிக்காவின் Raytheon மற்றும் Boeing நிறுவனங்களிடம் ஆயுதங்களை சவுதி வாங்க உள்ளது. இதன் முதற்கட்டமாக அமெரிக்க ஆயுதக் கிடங்குகளில் உள்ள ஆயுதங்களை 7 பில்லியன் டொலர் மதிப்பில் பெறுவதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த இரு நிறுவனங்களும் வெளியான இந்த தகவலை மறுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கமும் உறுதியான பதிலை வெளியிட மறுத்துள்ளது.
மட்டுமின்றி அமெரிக்காவுக்கான சவுதி தூதர் குறித்த தகவலுக்கு பதிலளிக்க மறுத்துள்ளதுடன், ஜனாதிபதி டிரம்ப் சவுதி விஜயத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டில் கிளர்ந்தெழும் உள்நாட்டு கலவரங்களுக்கு சவுதியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலும்,
சவுதியின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரான் தெரிவித்துள்ள நிலையிலும்,
பெருந்தொகைக்கு சவுதி ஆயுதங்களை கொள்முதல் செய்ய இருப்பதாக வெளியான தகவல், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போருக்கு தயாராகிறதா சவுதி? 110 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பு -
Reviewed by Author
on
November 24, 2017
Rating:

No comments:
Post a Comment