கால்சியம் குறைபாடா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் -
தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான்.
கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டும், அனைத்தும் சரியாகிவிடாது.
கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது, எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போம்.
பால்
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.
தயிர்-
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.சீஸ்-பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
உலர் அத்திப்பழம்
அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.
கடல் சிப்பி
பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.
இறால்
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.
ஆரஞ்சு சிட்ரஸ்
பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. சாலமன் சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.
கால்சியம் குறைபாடா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் -
Reviewed by Author
on
November 01, 2017
Rating:
Reviewed by Author
on
November 01, 2017
Rating:


No comments:
Post a Comment