மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வடக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் மட்ட சந்திப்பு-(படம்)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், பொது மக்களின் முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயும் அவசர உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று (28-11-2017)
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
-வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த உயர் மட்ட கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரன்,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி எஸ்.ஆர்.யூட்,மன்னார் பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் திருமதி அன்ரன் சிசில்,சுகாதார அமைச்சின் பிரதம கணக்காளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மாவட்ட வைத்தியசாலையின் பராமறிப்பு பிரச்சினைகள், நோயாளர்களுடன் தொடர்பாடலில் உள்ள பிரச்சினைகள், ஆளனி பற்றாக்குறை, வைத்திய சாலையின் அபிவிருத்தி உற்பட மக்களினால் முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
-மேலும் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை உயர் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் இன்றி அவர்களின் கீழ் உள்ள சில அதிகாரிகள் நடந்து கொள்ளுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினர்.
-மேலும் வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் தமக்கு கீழ் உள்ள அதிகாரிகளையும்,பணியாளர்களையும் உரிய முறையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கடமையாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், நிர்வாகத்தின் கீழ் கட்டுப்பாட்டுடன் செயற்படதாவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
-ஏனை மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை விட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பராமறிப்பு மிகவும் மந்த கதியுடன் காணப்படுவதாக தெரிவித்த அமைச்சர் வைத்தியசாலையின் பராமறிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.சுமார் 3 மணி நேரம் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வடக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் மட்ட சந்திப்பு-(படம்)
 
        Reviewed by Author
        on 
        
November 29, 2017
 
        Rating: 
      

No comments:
Post a Comment