சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்; தோனியின் விலை என்ன தெரியுமா?
2018 ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளி மாற்றங்கள் புதிய விதுமுறைகளும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்இ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நிலையில் இந்த தகவல் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் முக்கிய மாற்றமாக இருப்பது ஒவ்வொரு அணியிலும் இரண்டு உள்நாட்டு வீரர்கள் 1 வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தவிர மற்ற எல்லா வீரர்களையும் ஏலத்தில் விட வேண்டும் என்பதாகும்.
அணி வீரர்கள் தேர்வு முறைகளில் மும்பை அணி 5 அல்லது 6 வீரர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வீரர்களையும் பெங்களூரு ஐதராபாத் டெல்லி அணிகள் தலா 3 வீரர்களை தக்க வைக்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
ஆனால்இ இதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல்இ ஐபிஎல் போட்டியின் ஏலத்தை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாம். ஆனால் ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு அணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளதால் பிசிசிஐ இது குறித்து உடனடி முடிவு எடுக்க தயக்கம் காட்டி வருகிறதாம்.
இவ்வளவு சிக்கலிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியை ரூ.50 கோடி கொடுத்து வாங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்; தோனியின் விலை என்ன தெரியுமா?
Reviewed by Author
on
November 24, 2017
Rating:
Reviewed by Author
on
November 24, 2017
Rating:


No comments:
Post a Comment