மன்னார் வங்காலை குணவர்த்தனா வீதி நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாமையுள்ளது மக்கள் கவலை...
வங்கலை 4ம்வட்டாரத்தின் அமைந்துள்ள குணவர்த்தனா வீதியானது சுமார் 15வருடங்களுக்கு மேலாக எந்தவித அபிவிருத்தியும் இன்றி இருப்பதால் மக்கள் கவலை....
மக்களினதும் மாணவர்களினதும் போக்குவரத்துப்பாவனையானது மிகவும் சிரமமாகவுள்ளது இவ்வழியினை 5ம் வட்டாரம் 06ம்வட்டாரம் மக்களும் ஏனையோரும் அதிகமாக பாவிக்கின்றனர் அவ்வழியானது பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் தேவாலயத்துக்கும் இலகுவாக செல்லக்கூடிய பாதையாகவுள்ளது.
இப்பாதையானது அகலம் குறைவாகவும் அதே நேரத்தில் பாதையின் அருகில் குப்பைகள் கல்லுகள் குவித்தும் காணப்படகின்றது மரமும் நிற்கின்றது இதனால் பயணிப்பவர்கள் மிகவும் சிரப்படுவதோடு மழைகாலம் என்பதால் இதனால் பயணம் செய்வது மிகவும் கடிணம்.
காரணம் நீர்தேங்கிவிடும் ஓடுவதற்கான வசதியின்மையும் வீட்டுப்பாவனைக்கழிவு நீரினையும் வெளியால் வீதியில் விடுவதால் பாதையானது வெள்ளமாய்க்கிடக்கும்.
இப்பாதையினுடாக மாணவர்களும் மக்களும் பெரும் சிரமத்துக்குள்ளா கிவருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு உடனடியாக நானாட்டான் பிரதேசசபை அதிகாரிகள் கவனத்தில்கொண்டு எமக்கு நல்லதொரு தீர்வைபெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்…
தீர்வு கிடைக்குமா மக்களின் எதிர்பார்ப்பு….

மன்னார் வங்காலை குணவர்த்தனா வீதி நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாமையுள்ளது மக்கள் கவலை...
 
        Reviewed by Author
        on 
        
November 27, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
November 27, 2017
 
        Rating: 



No comments:
Post a Comment