வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்.....
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2018 ம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்றை நெறிக்கான முடிவுத்திகதி எதிர்வரும் 24 ஆம் திகதி என்பதனால் ஆண்டு 9 ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும் தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் எ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கற்கை நெறியின் போது மாணவர்களுக்கு இலவசக்கற்கை நெறி . மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, போக்குவரத்துப் பயணச்சீட்டு, தொழில்வழிகாட்டல் சேவை கற்கைநெறியின் பின்னர் மாணவர்களுக்கு: 06 மாத கால தொழிற்பயிற்சி, உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, கடன் பெற்றுக் கொள்ளும் வசதி என்பனவும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்.....
Reviewed by Author
on
November 15, 2017
Rating:

No comments:
Post a Comment