ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் வீக்கம்: அறிகுறிகள் இவைதான் -
ஆண்களின் உடலில் அடிவயிற்றில், சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க் குழாய் தொடங்கும் இடத்தில் புரோஸ்டேட்(prostate) சுரப்பி அமைந்துள்ளது.
இந்த சுரப்பியின் நடுவே சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் செல்கிறது, இச்சுரப்பி ஆண்களின் பாலியல் சுரப்பியாகும்.
இதில் ஜிங்க் மற்றும் புரத என்சைம் கலந்த திரவம் சுரக்கிறது, வெண்ணெய் போன்ற இத்திரவம் விந்து செல்லுக்கு ஊட்டம் அளிக்க உதவுகிறது.
புரோஸ்டேட் வீக்கம் ஏற்படுவது ஏன்?
பரம்பரை காரணமாக சிலருக்கு இருபது வயதிலேயே புரோஸ்டேட் வீக்கம் ஏற்படும். ஆனால், சிலருக்கு மட்டுமே இது பிரச்சனை ஆகிறது.ஆண்களுக்கு வயதாகும் போது டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனின் சுரப்பு குறையும் போது புரோஸ்டேட் வீக்கம் உண்டாகும்.
புரோஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள்?
- சிறுநீர் சிறுகச் சிறுக அடிக்கடி வெளியேற்றுவது,
- நீர்க்கடுப்பு, எரிச்சல் ஆகிய அறிகுறிகள் தென்படுவது,
- சிறுநீர் மெல்லியதாகப் போவது,
- சிறுநீர் கழிக்கும் போது தடைபடுவது,
- இரவு நேரத்தில் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பது,
- சிறுநீர் கழித்த பின்பும் சிறுநீர் உள்ளது போல் உணர்வது,
- சிறுநீர் கழித்த கடைசியில் சொட்டுச் சொட்டாகப் சிறுநீர் வெளியேறுவது
ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் வீக்கம்: அறிகுறிகள் இவைதான் -
Reviewed by Author
on
December 18, 2017
Rating:

No comments:
Post a Comment