அண்மைய செய்திகள்

recent
-

களத்திற்கு சென்ற முசலி பிரதேச செயலாளர்.....


மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீள்குடியேற்றம் செயலணியின் ஊடாக 59 வேலைத்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்ற வேளை சில இடங்களை முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இன்று மாலை பார்வையிட்டார்.

அத்துடன் சமூக மட்ட அமைப்பின் தலைவர்களையும்,உறுப்பினர்களையும்சந்தித்து வேலைத்திட்டம் ஏன் இதுவரைக்கும் நிறைவு பெறவில்லை என விளக்க கோரிக்கையினை கேட்டுக்கொண்டார்.

பிரதேச செயலாளர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;

இதுவரைக்கும் 90% வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளது எனவும் வேலைத்திட்டங்களை பொறுப்பு எடுத்த சமூகமட்ட அமைப்புகள் உரியமுறையில் கரிசனை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் முசலி பிரதேச செயலகத்தில் முன்னர் கடமையாற்றிய உயர் அதிகாரிகள் இவ்வாறு களத்திற்கு சென்று வேலைத்திட்டங்களை பார்வையிட்டது மிகவும் குறைவாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது முசலி பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளரும்,இணக்க சபை தலைவருமான றாபி கலந்துகொண்டார்.
(எஸ்.எச்.எம்.வாஜித்)

களத்திற்கு சென்ற முசலி பிரதேச செயலாளர்..... Reviewed by Author on December 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.