இலங்கையில் கால்பந்து உலக கிண்ணம் -
அடுத்தாண்டு ரஸ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டி தொடரின் வெற்றிக்கிண்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணத்தின் ஓர் அங்கமாக இலங்கையிலும் உலகக்கிண்ணம் உலாவரவுள்ளது.
ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகலரும் கண்டுரசிப்பதற்காக 54 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்த பயணத்தின் முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 24 ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதுடன், இந்த வெற்றிக் கிண்ணம் அன்று பிற்பகல் மாலைதீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போதே குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் கால்பந்து உலக கிண்ணம் -
Reviewed by Author
on
December 23, 2017
Rating:

No comments:
Post a Comment