அண்மைய செய்திகள்

recent
-

எந்த பழம் எவ்வித சரும பிரச்சனையை .....


பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகு குறைபாடுகளை போக்கவும் உதவுகிறது. ஆனால் எந்த பழம் எவ்விதமான சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது என்பது நம்மில் யாருக்கும் தெரியாது.
எலுமிச்சை
எலுமிச்சை பழம் எண்ணெய் சருமம், முகப்பரு, கரும்புள்ளி ஆகிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதற்கு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் கலந்து ஒரு பஞ்சினால் முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

பப்பாளி
பப்பாளி பழம் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளி, மருக்களை போக்க உதவுகிறது. அதற்கு பப்பாளியின் சதைப் பகுதியை தினமும் முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

அவகாடோ
அவகாடோ ஊதாக் கதிர்கள் மூலம் ஏற்படும் சரும பாதிப்புகளை சரிசெய்கிறது. அதற்கு அவகாடோவின் சதைப் பகுதியை எடுத்து அதில் பால் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் சருமத்தில் உண்டாகும் மெல்லிய சுருக்கம், கருவளையம், மற்றும் கருமையை போக்க உதவுகிறது. அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாறுடன் சிறிது ஆலிவ் ஆயிலை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

தர்பூசணி
தர்பூசணி சாறுடன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி ஆகிய அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர சரும தொய்வை தடுக்கலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. அதற்கு வெள்ளரிக்காயை பாலுடன் சேர்த்து அரைத்து அதை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

மாம்பழம்
மாம்பழம் சருமத்திற்கு நல்ல போஷாக்கை அளிக்கவும், ஒடுங்கிய கன்னங்களை புஷ்டியாக்கவும் உதவுகிறது. அதற்கு மாம்பழத்தின் சதைப் பகுதியுடன் சிறிது பால் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

வாழைப்பழம்
வாழைப்பழம் முகத்தின் தொய்வு மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. அதற்கு வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து மசித்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

ஆப்பிள்
ஆப்பிள் பழம் சரும வறட்சியை போக்கி சருமப் பொலிவை தருகிறது. அதற்கு ஆப்பிள் பழத்துடன் பால் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

திராட்சை
திராட்சை பழம் சுருக்கங்களைப் போக்க உதவுகிறது. அதற்கு திராட்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தேய்த்து காயவைத்து கழுவ வேண்டும்.

முழாம்பழம்
முழாம்பழம் சோரியாஸிஸ் நோய்க்கு மருந்தாக உதவுகிறது. அதற்கு முழாம்பழத்தின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

அன்னாசிப் பழம்
அன்னாசிப் பழம் சரும சுருக்கத்தைப் போக்குகிறது. அதற்கு 1 ஸ்பூன் அன்னாசிப் பழச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

கிவிப்பழம்
கிவிப்பழம் செல் சிதைவை தடுக்க உதவுகிறது. அதற்கு கிவிப்பழத்தை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
எந்த பழம் எவ்வித சரும பிரச்சனையை ..... Reviewed by Author on December 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.