ஜெயலலிதாவின் அப்பாவை தாய் விஷம் வைத்து கொன்றார்! பெங்களூர் லலிதா வெளியிட்ட தகவல் -
அது மட்டுமல்லாது ஜெயலலிதாவின் தந்தைக்கு அவரது தாயார் சந்தியா விஷம் வைத்து கொன்றார் எனவும் திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளார்..
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பல்வேறு ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், சோபன்பாபுவிற்கும் ஜெயலலிதாவிற்கும் பெண் குழந்தை பிறந்தது உண்மை என்று சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
சசிகலாவிற்கு தெரியும்
ஜெயலலிதாவிற்கு 1980ல் பிரசவம் பார்த்தது எனது பெரியம்மதான் என்று கூறிய லலிதா, தன்னிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டதாக கூறினார்.
திருமணத்திற்கு முன்பே ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது சசிகலாவிற்கும் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜெயராமனுக்கு விஷம்
ஜெயலலிதாவின் ஈகோதான் உறவினர்களை நெருங்கவிடாமல் தடுத்து விட்டது. ஜெயலலிதாவின் அப்பாவிற்கு விஷம் கொடுத்து கொன்று விட்டனர்.
சந்தியாதான் விஷம் கொடுத்து விட்டார் என்று எனது தாய் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
சொத்தில் பங்கில்லை
ஜெயலலிதாவின் தந்தையின் இன்னொரு மனைவி மகனான (ஜெயலலிதாவின் சகோதரர் உறவு முறை) வாசுதேவனுடன் பேசியதில்லை. வாசுதேவன் சொல்வது பொய்.
இந்த சொத்தில் ஒரு பைசா கூட கிடைக்காது. வாசுதேவனுக்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் வாசுதேவனுக்கு சொந்தமில்லை என்றும் கூறியுள்ளார்.
டி.என்.ஏ டெஸ்ட் சொல்லட்டும்
மேலும் அம்ருதா வாரிசு என்று நான் எந்த டிவி சேனலிலும் கூறவில்லை. டி.என்.ஏ டெஸ்ட் மூலம் நிரூபிக்கட்டும். அம்ருதாவை வளர்த்தது சைலஜாதான்.
அம்மா, அப்பா யார் என்று நிரூபித்துக்கொள்ளட்டும். ரஞ்சனியும், அம்ருதாவும் என்னை வந்து பார்த்தார்கள் நான் கையெழுத்து போட்டேன் என்றும் கூறியுள்ளார்.
சந்தியாவின் மகள் ஷைலஜா
அதே போல அம்ருதாவை வளர்த்த ஷைலஜாவும் சந்தியாவிற்கு பிறந்தவர்தான். ஆனால் ஷைலஜாவின் தந்தை வேறொருவர். அது ஜெயராமன் இல்லை; ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே இந்த சர்ச்சை எழுந்தது என்றார் லலிதா.
லலிதா சொல்வது உண்மையா?
ஜெயலலிதா உடனான தொடர்பு 1970களில் விட்டுப்போனதாக கூறும் லலிதா, 1980ல் குழந்தை பிறந்ததாக கூறுகிறார். அதுவும் வீட்டில் பிறந்ததாக கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து இதனை கூறுவது சொத்துக்காக இல்லை என்றும் கூறியுள்ளார் லலிதா.
ஜெயலலிதாவின் அப்பாவை தாய் விஷம் வைத்து கொன்றார்! பெங்களூர் லலிதா வெளியிட்ட தகவல் -
Reviewed by Author
on
December 05, 2017
Rating:
Reviewed by Author
on
December 05, 2017
Rating:


No comments:
Post a Comment