மன்னார் பேசாலையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம்-பொலிஸார் விசாரனை-(படம்)
மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் படுத்துறங்கிய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் குறித்த இளைஞரின் மரணம் கொலை என உடற்கூற்று பரிசோதனையின் மூலம் தெரிய வருகின்றது.
மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது-29) என்னும் இளைஞரே மர்மமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சப்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை(9) இரவு வேளை வீட்டார் அனைவரும் வீட்டில் இருந்து பிரிதொரு நிகழ்வுக்குச் சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் தனிமையில் தனிது வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.
வேளியில் சென்றவர்கள் வீட்டிற்கு வந்த நிலையில்,குறித்த இளைஞன் அயர்ந்து நித்திரை கொள்ளுவதாக நினைத்து எழுப்பவில்லை.
மறு நாள் வெள்ளிக்கிழமை(8) நீண்ட நேரமாகியும் எழும்பாத நிலையில் மதிய உணவு நேரமாகிய நிலையில் சந்தேகம் கொண்டு எழுப்ப முயன்ற நிலையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமையினை உறவினர்கள் அறிந்தனர்.
இதனையடுத்து உடனடியாக பேசாலைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சட்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் வவுனியாவில் இருந்து விசேட தடயவியல் நிபுண பொலிஸார் வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டதோடு நீதவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. குறித்த் சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மரணத்தில் சந்தேகம் கொண்டு சட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறித்த சடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டார்.
இதன் போது கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் தென்படுவதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பேசாலையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம்-பொலிஸார் விசாரனை-(படம்)
Reviewed by Author
on
December 12, 2017
Rating:
Reviewed by Author
on
December 12, 2017
Rating:




No comments:
Post a Comment