தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கு தமிழரசுக் கட்சிக்கு பெரும் பங்குண்டு
தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட அழைத்துச் சென்றதில் தமிழரசு கட்சிக்கு பெரும் பங்குண்டு. இடையில் அரசியலுக்கு வந்தவர்களுக்கு இது பற்றி அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (10-12-2017) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னால் முடிந்தால் தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்கட்டும் அவ்வாறு இல்லையென்றாலும் பரவாயில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட அழைத்துச் சென்றதில் தமிழரசு கட்சிக்கு பெரும் பங்குண்டு. இடையில் அரசியலுக்கு வந்தவர்களுக்கு இது பற்றி அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.
இந்நிலையில், ஆயுதப் போராட்டம் என்பது கேவலமான ஒன்றல்ல. அதனை கொழும்பில் இருந்து வந்தவர்கள் கொச்சைப்படுத்த முடியாது.
ஆயுதம் ஏந்தி போராடியவர்களும், ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுமே தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றார்கள் என்பதே உண்மை.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னால் முடிந்தால் தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்கட்டும்.
அவ்வாறு இல்லை என்றாலும் பரவாயில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தாலே போதும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் போராளிகளை தவறாக பேசியதாக கூறி நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கு தமிழரசுக் கட்சிக்கு பெரும் பங்குண்டு
Reviewed by Author
on
December 11, 2017
Rating:
Reviewed by Author
on
December 11, 2017
Rating:


No comments:
Post a Comment