அண்மைய செய்திகள்

recent
-

மாதவிடாய் காலத்தில் Tampon பயன்படுத்தியதால் காலை இழந்த மொடல் அழகி -


கலிபோர்னியாவை சேர்ந்த மொடல் அழகி ஒருவர் மாதவிடாய் காலத்தில் Tampon பயன்படுத்திய காரணத்தால் toxic shock syndrome- ஆல் பாதிக்கப்பட்டு தனது இடது காலை இழந்துள்ளார்.
Tampon என்பது உயர்தரமான துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள உறிஞ்சக்கூடிய பொருள் ஆகும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் இதனை பயன்படுத்துவார்கள்.

கலிபோர்னியாவை சேர்ந்த Lauren Wasser (29) என்ற மொடல் அழகி, வெற்றிகரமாக தனது தொழிலில் ஈடுபட்டு வந்தார். மாதவிடாய் காலங்களில் Ramp Walk செய்ய வேண்டி வந்தால், இவர் Tampon பயன்படுத்துவது வழக்கம்.
இதனை பயன்படுத்தியதால் நச்சு நோயால் பாதிக்கப்பட்டு, இவரது கால்களில் தீக்காயம் ஏற்பட்டு கால்கள் வீங்கியுள்ளது. நாளடைவில் அவை செயலிழந்துவிட்டதால், கடந்த 2012 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சையின் மூலம் இடது கால் நீக்கப்பட்டது.

உடல் வெப்பநிலை 38.9 டிகிரிக்கு மேல் உயர்வது toxic shock syndrome- இன் அறிகுறியாகும், தற்போது ஒரு கால்களை இழந்துவிட்ட நிலையிலும், பொய்க்கால்களை வைத்துக்கொண்டு இயன்ற அளவு மொடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார்.

இதுபோன்ற ஒரு நிலை மற்றவர்களுக்கும் வந்துவிடக்கூடாது என்று கூறும் இவர், தினம் தினம் வலியை அனுபவித்து வருகிறேன். எனது கால்கள் பார்ப்பதற்கு தங்க நிறத்தில் இருக்கும், அதனை நினைத்து நானே சில நேரங்களில் பெருமைப்பட்டுள்ளேன்.
தற்போது, எனது கால்களை இழந்துவிட்டது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. இருப்பினும் எனது விடாமுயற்சியால் மொடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.

மாதவிடாய் காலத்தில் Tampon பயன்படுத்தியதால் காலை இழந்த மொடல் அழகி - Reviewed by Author on December 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.