பிரித்தானியாவில் அசத்தும் இலங்கை மாணவன்! சர்வதேச ஊடகங்கள் பெருமிதம் -
இலங்கையை சேர்ந்த சிறுவன் ஒருவர் சர்வதேச ஊடகங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த மாணவனான கிரிஸ் கோபிகிருஷ்ணா பிரித்தானி நேற்றைய தினம் Leicester city fc மற்றும் Cristal palace அணிகளுக்கு இடையில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் கிரிஸ் தனது சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார் என சர்வதேச தொலைக்காட்சிகள் பாராட்டியுள்ளன.West Brom மற்றும் Manchester United அணிகளுக்கு இடையில் mascot பகுதியில் இன்று நடைபெறும் போட்டியிலும் அவர் விளையாடவுள்ளார்.
இலங்கையை சேர்ந்த கோல்கீப்பர் ஒருவர் பிரித்தானிய காற்பந்தாட்ட அணியில் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். Jaguar கார் நிறுவனத்தின் ஊடாக பிரித்தானியாவில் விளையாடும் வாய்ப்பினை கிரிஸ் பெற்றுள்ளதாக அவரின் தந்தை கோபிகிருஷ்ணா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவர் ஒருவர் முதல் முறையாக சர்வதேச வரை சென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கிரிஸ் கோபிகிரிஷ்ணா பிரித்தானியாவின் Coventry என்ற பகுதியில் 2009 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். கிரிஸ் கோபிகிரிஷ்ணாவின் பெற்றோர் மட்டக்களப்பு கல்லாறு பகுதியில் இருந்து 2006ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் அசத்தும் இலங்கை மாணவன்! சர்வதேச ஊடகங்கள் பெருமிதம் -
Reviewed by Author
on
December 18, 2017
Rating:

No comments:
Post a Comment