வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்டால் வியாபார நிலையங்களுக்குப் பாதிப்பு!!
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் 25ஆம் திகதியிலிருந்து பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிகின்றோம். இதனால் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பல ஊழியர்கள் வேலை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்,
.
வவுனியா பேருந்து நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. 25ஆம் திகதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொண்டால் இங்கிருக்கும் வியாபார நிலையங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல ஊழியர்கள் வேலைவாய்ப்பினை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் என பலரிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும். இப்பிரச்சினைக்கு தொடர்புபட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி வர்த்தகர் சங்கத் தலைவரிடம் வியாபார நிலைய உரிமையாளர்கள் இன்று மாலை மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இது தொடர்பாக வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவிக்கையில், வர்த்தக சங்க மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எனினும் இது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்கள் தமக்கு சாதகமான பதிலினைப் பெற்றுத்தருமாறு தெரிவித்ததுடன் சாதகமான நிலை ஏற்படாவிட்டால் தமது வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்டால் வியாபார நிலையங்களுக்குப் பாதிப்பு!!
Reviewed by Author
on
December 20, 2017
Rating:

No comments:
Post a Comment