சிரியா விமானப்படை தாக்குதலில் 33 பொதுமக்கள் பலி
சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அரசின் விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் 33 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராடிவரும் புரட்சிப் படையினரை ஒழிக்க ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் அதிபரின் படைகளுக்கு உதவியாக வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் சிரியா விவகாரத்தில் ரஷியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து வருகிறது. இந்நிலையில், லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா போராளி குழுக்களும் ஈரான் படைகளும் அதிபர் ஆசாத்தின் படைகளிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் வடமேற்கில் உள்ள இட்லிப் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் அரசின் விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் 33 பேர் உயிரிழந்ததாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த போர் கண்காணிப்பு முகமை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சரகேப் நகரில் உள்ள மார்க்கெட் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மீது இன்று நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் மட்டும் 16 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
சிரியா விமானப்படை தாக்குதலில் 33 பொதுமக்கள் பலி
Reviewed by Author
on
January 30, 2018
Rating:

No comments:
Post a Comment