அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப்பெரிய மோதிரம்: என்ன விலை தெரியுமா? -


ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் உலகின் மிகப்பெரிய மோதிரம் ஒன்றை பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறித்த மோதிரத்தின் மதிப்பு சுமார் 3 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது.
21 காரட் தங்கத்தாலான இந்த மோதிரம் சுமார் 64 கிலோ கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி 5.2 கிலோ எடை கொண்ட விலை உயர்ந்த வைர கற்களையும் அதில் பதித்துள்ளனர். மேலும் 615 Swarovski கற்களும் அதில் பதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதிரத்தை வடிவமைக்க 45 நாட்களாக மொத்தம் 450 மணி நேரம் செலவிட்டுள்ளனர். 55 நிபுணர்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ள இந்த மோதிரமானது 547,000 டொலர் தொகையில் கடந்த 2000-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
அதன்பின்னர் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வடைந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு 3 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர்களான தொய்பா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய மோதிரம்: என்ன விலை தெரியுமா? - Reviewed by Author on January 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.