இந்த மீனை ஒருவர் சாப்பிட்டாலே அவங்க சந்ததியே பலியாகுமாம்!... எச்சரிக்கை மக்களே -
பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம். இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் உண்மையில் இது ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் மீன். எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.
கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும், கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு அசுரத்தனமாக வளரக்கூடியது.இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை, உளுவை, ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் கூறுகிறார்கள்.
இந்த மீனுக்கு துரித வளர்ச்சியை கொடுக்கும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் குடல் போன்ற கழிவுகள் இவை இருக்கும் குட்டையில் கொட்டப்படுகின்றனவாம்.தெருநாய்களைக்கூட அடித்து இந்த குட்டைகளில் போடுகின்றனராம்.
இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாம்.
இது குறித்து பல பத்திரிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன என்றாலும் இன்னமும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மீனை ஒருவர் சாப்பிட்டாலே அவங்க சந்ததியே பலியாகுமாம்!... எச்சரிக்கை மக்களே -
Reviewed by Author
on
January 19, 2018
Rating:
Reviewed by Author
on
January 19, 2018
Rating:


No comments:
Post a Comment