மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் பொங்கல் நிகழ்வு ....சந்தோம் மூத்தோர் இல்லத்தில்
தமிழர் பாரம்பரிய தேசிய நிகழ்வான் பொங்கல் புத்தாண்டு கொண்டாட்டம் 04 நாள் நிகழ்வாக போகி-தைப்பொங்கல் பட்டிப்பொங்கல்-காணும்பொங்கல் ஆகும்
சூரியனுக்கு நன்றி செழுத்தும் விதமாக தைப்பொங்கல் நிகழ்வு எல்லோராலும் கொண்டாடப்படுகின்றது
மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் சந்தோம் மூத்தோர் இல்லத்தின் பொறுப்பகவுள்ள அருட்சகோதரிகள் அனுமதியுடன் காலை 7- 30 மணியளவில் மூத்தோர்களுடன் சேர்ந்து பொங்கல் பொங்கி வணக்கவழிபாடுகளுடன் சந்தோசமாக கொண்டாடப்பட்டது.
எமது(கிறிஸ்த்துபிறப்பு விழா வருடபிறப்பு விழாக்கள்) ஏனையவை
இவ்வாறான நிகழ்வுகளை கொண்டாடும் போது அந்த மகிழ்ச்சி எமக்குள் மட்டும் இருந்துவிடாது எம்மை சூழவுள்ள எம்மால் மதிக்கப்படவேண்டிய காகப்படவேண்டிய தேவையுடையவர்களுடன் இணைந்து செயல்படுவோம் அப்போது எமது மகிழ்ச்சி இரட்டிப்பானதாகும்.தேவைகள் அதிகமிருக்கின்றன அதையறிந்து செயலாற்றவேண்டும்.
மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் பொங்கல் நிகழ்வு ....சந்தோம் மூத்தோர் இல்லத்தில்
Reviewed by Author
on
January 15, 2018
Rating:
Reviewed by Author
on
January 15, 2018
Rating:






No comments:
Post a Comment