ஒன்றாக இணையும் நீரும் நெருப்பும்: ஒரே கொடியின் கீழ் செயல்படவும் முடிவு
இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹொக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கும் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
வட மற்றும் தென் கொரிய விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஐக்கிய கொரியாவின் ஆதரவு கொடியை ஏந்திக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டில் கலந்துகொள்ளவும் அமைதி கிரமமான பான்முன்ஜாமில் சந்தித்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
முன்னதாக. இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின்போது உற்சாகமூட்டுவதற்காக 230 பேரை அனுப்ப வட கொரியா சம்மதித்துள்ளது.
இந்த விளையாட்டின்போது இசைப்பதற்காக 140 இசைக்கலைஞர்கள் அடங்கிய இசைக்குழு ஒன்றை வட கொரியா அனுப்புவதற்கு 2 கொரியாக்களும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளன.
வட கொரியாவின் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொள்வதால், வட கொரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளது.
இந்த ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றால், வட கொரியாவின் பரிவாரங்களின் எண்ணிக்கை, அந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். போட்டிகளில் குறைவானோரே பங்கேற்பர்.
ஒன்றாக இணையும் நீரும் நெருப்பும்: ஒரே கொடியின் கீழ் செயல்படவும் முடிவு
Reviewed by Author
on
January 18, 2018
Rating:
Reviewed by Author
on
January 18, 2018
Rating:


No comments:
Post a Comment