சுவிஸ் நிறுவனத்தின் உலகின் புதுமையான மின் நிலையம் -
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது.
இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வழக்கமான அனல்மின் நிலையங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழும்.
ஆனால், இந்த மின் நிலையம் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டு, மின்னாற்றலை உற்பத்தி செய்கிறது.
இந்த மின்நிலையம், நிலத்தடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் உள்ள கருங்கல் பாறைகளில் இருந்து கார்பன் -டை-ஆக்ஸைடை உறிஞ்சி, குறைந்த வெப்பநிலைக்கு அதனை உட்படுத்தி மின்சாரமாக மாற்றுகிறது.
இந்த தொழில்நுட்பம் ‘கார்பிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை சுவிஸ் விஞ்ஞானிகள் குழு, 2 ஆண்டுகளின் முயற்சியின் பலனாக கண்டுபிடித்தது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘பூமி முழுவதும் இந்த பாறை அடுக்கு பரவலாக காணப்படுகிறது. எனவே, மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல், எந்த இடத்திலும் இந்த தொழில்நுட்பத்தில் மின் உற்பத்தி செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளனர்.
எனினும், பூமிக்கு அடியில் உள்ள கார்பனை உறிஞ்சுவதன் மூலமாக ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.
சுவிஸ் நிறுவனத்தின் உலகின் புதுமையான மின் நிலையம் -
Reviewed by Author
on
January 23, 2018
Rating:
Reviewed by Author
on
January 23, 2018
Rating:


No comments:
Post a Comment