அண்மைய செய்திகள்

recent
-

உலகில் கடைசி சொட்டு தண்ணீரும் காலியாகப் போகும் நகரம் எது தெரியுமா?


தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தண்ணீர் முற்றிலும் காலியாகும், மக்கள் திண்டாட்டத்திற்கு ஆளாகப்போகிறார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது.
அந்த நாளில், 40 லட்சம் பேர் வாழும் இந்நகரில் தண்ணீர் விநியோகம் நிறுத்ததப்படும், எல் நினோ காலநிலை உள்ளிட்ட காரணங்களால் 3 ஆண்டுகளாக மழை அளவு குறைந்து தென்னாப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

அணை நீர்மட்டங்கள் மோசமாக குறைந்துவிட்டது, எனவே அளவீடு செய்தே தண்ணீர் தரப்படுகிறது.
ஒரு நாளுக்கு 87 லிட்டர் தண்ணீர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் அளவும் பிப்ரவரி மாதத்தில் 50 லிட்டராக குறையவுள்ளது.
ஷவரில் நிமிடத்துக்கு 15 லிட்டர் நீர் செலவாகிறது, கழிவறையின் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் 15 லிட்டர் நீர் செலவாகிறது எனும்போது இது மிகக்குறைந்த நீர்.

கார்கள் கழுவுதல், நீச்சல் குளங்களை நிரப்புவது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தோட்ட பாசனத்திற்கும், சலவை செய்யவும் மக்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலைமை மாறாவிட்டால், ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் எல்லா பிரதானக் குழாய்களும் அடைக்கப்படும். இந்நாளில், உலகின் தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரம் கேப் டவுன் ஆகும்.
தண்ணீரை அளவிட்டு விநியோகிக்க ராணுவம் தெருவில் இறங்கி வேலை செய்யவேண்டிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் கடைசி சொட்டு தண்ணீரும் காலியாகப் போகும் நகரம் எது தெரியுமா? Reviewed by Author on January 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.