மாந்தை மாதா (லூர்து அன்னை) திருத்தலத்தின் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில் , கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆழத்தையும்,
பாரம்பரியத்தையும் பறைசாற்றி நிற்கும் மாந்தை மாதா திருத்தலத்தின்
பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இன்று 17-02-2018 காலை 7-00 மணியளவில் ஆயர் குருக்கள் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாலையணிவித்து வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு திருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் குருமுதல்வர் விக்ரர் சோசை ஏனைய குருக்களுடன் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
வரலாற்றச் சிறப்புமிக்க இந்தத் திருத்தலத்தலம் மருதமடுத் திருத்தாயாரின் தொடக்ககால இருப்பிடம் என்பதும், ஆரம்ப ஆலயம் ஒல்லாந்தர்காலத்தில் அழிக்கப்பட்டதும் வேதகலாபனையின் போது கத்தோலிக்க சமயத்திற்கெதிரான வன்முறையின்போது மடுமாதாவின் அற்புதத் திருவுருவம் மடுத்திருப்பதிக்கு சென்றதென்றும் நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன.
இத் திருத் தலத்திலே08-02-2018 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆயத்த வழிபாடுகள் 09 நவநாட்கள் தினமும் மாலை வேளையில் நடைபெற்று இன்று 17-02-2018 காலை 7-00 மணியளவில் திருவிழாத்திருப்பலி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இப்பெருவிழாவிற்கு மன்னார் மாவட்டத்தின் அனைத்துப்பங்குகளில் இருந்து குருக்கள் துறவியர்கள பங்குத்தந்தையர்கள் பங்குமக்கள் பொதுநிலையினர் ஏனையமாவட்டங்களில் இருந்தும் ஏராளமனோர் கலந்துகொண்டனர் இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர்கள் அரச அதிகாரிகள் ஏனைய அதிகாரிகள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்
திருப்பலி நிறைவில் மாந்தையின் இராக்கினி லூர்து அன்னையின் ஆசீர்வாதமும் வழங்க ஒருவருகொருவர் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
"மாந்தையின் இராக்கினி லூர்து அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள்"
-வை.கஜேந்திரன்-

Reviewed by Author
on
February 17, 2018
Rating:

No comments:
Post a Comment