அண்மைய செய்திகள்

recent
-

நடிகை ஸ்ரீதேவி காலமானார் - வசீகர நாயகி ஸ்ரீதேவி: சினிமாவின் 50 ஆண்டு சகாப்தம்.. சிறு பார்வை..


தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
1969 ஆம் ஆண்டு வெளிவந்த 'துணைவன்' திரைப்படத்தின் மூலம் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.

இவர் கதாநாயகியாக அறிமுகமானது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படத்தில்.
1977ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
அதன் பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜுலி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார்.
1978ல் வெளிவந்த “சோல்வா சாவன்” (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் “மூன்றாம் பிறை” திரைப்படம் ஹிந்தியில் “சத்மா” என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996ஆம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனிகபூரை மணமுடித்தார்.
திருமணத்திற்குப் பின் 14 ஆண்டுகளுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கலானார்.
இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். அதில் தமிழ் படங்களில் ஸ்ரீதேவி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் கீழே சிலவற்றை காணலாம்.
1.துணைவன் - குழந்தை நட்சத்திரம்
2.நம்நாடு - குழந்தை நட்சத்திரம்
3.பாபு - குழந்தை நட்சத்திரம்
4.கனிமுத்து பாப்பா - குழந்தை நட்சத்திரம்
5.வசந்த மாளிகை - குழந்தை நட்சத்திரம்
6.பாரதவிலாஸ் - குழந்தை நட்சத்திரம்
7.திருமாங்கல்யம் - குழந்தை நட்சத்திரம்
8.மூன்று முடிச்சு - கதாநாயகி
9.16 வயதினிலே - கதாநாயகி
10.காயத்ரி - கதாநாயகி
11.கவிக்குயில் - கதாநாயகி
12.சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு - கதாநாயகி
13.வணக்கத்துக்குரிய காதலியே - கதாநாயகி
14.டாக்சி டிரைவர் - கதாநாயகி
15.இது எப்படி இருக்கு - கதாநாயகி
16.மச்சான பாத்தீங்களா - கதாநாயகி
17.மனிதரில் இத்தனை நிறங்களா - கதாநாயகி
18.முடிசூடா மன்னன் - கதாநாயகி
19.வைலட் பிரேம்நாத் - துணை நடிகை
20.சிகப்பு ரோஜாக்கள் - கதாநாயகி
21.ப்ரியா - கதாநாயகி
22.தர்மயுத்தம் - கதாநாயகி
23.கல்யாணராமன் - கதாநாயகி
24.பகலில் ஓர் இரவு - கதாநாயகி
25.கவரிமான் - துணை நடிகை
26.நீலமலர்கள் - கதாநாயகி
27.பட்டாக்கத்தி பைரவன் - கதாநாயகி
28.லக்ஷ்மி - கதாநாயகி
29.தாயில்லாமல் நானில்லை - கதாநாயகி
30.குரு - கதாநாயகி
31.ஜானி - கதாநாயகி
32.வறுமையின் நிறம் சிகப்பு - கதாநாயகி
33.விஸ்வரூபம் - கதாநாயகி
34.பாலநாகம்மா - கதாநாயகி
35.சங்கர்லால் - கதாநாயகி
36.மீண்டும் கோகிலா - கதாநாயகி
37.ராணுவவீரன் - கதாநாயகி
38.மூன்றாம் பிறை - கதாநாயகி
39.தனிக்காட்டு ராஜா - கதாநாயகி
40.போக்கிரிராஜா - கதாநாயகி
41.வாழ்வே மாயம் - கதாநாயகி
42.அடுத்த வாரிசு - கதாநாயகி
43.சந்திப்பு - கதாநாயகி
44.நான் அடிமை இல்லை - கதாநாயகி
45.இங்கிலீஷ் விங்கிலீஷ் - கதாநாயகி
46.புலி - துணை நடிகை

கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு மாம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
அவர் அறிமுகமான துணையான வெளியான அதே தினத்தில் 50 ஆண்டுகள் கழித்து மாம் வெளியானது.
நடிகை ஸ்ரீதேவி, சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருதுகளையும், பின்னர் 2013இல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
 திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.











நடிகை ஸ்ரீதேவி காலமானார் - வசீகர நாயகி ஸ்ரீதேவி: சினிமாவின் 50 ஆண்டு சகாப்தம்.. சிறு பார்வை.. Reviewed by Author on February 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.