அண்மைய செய்திகள்

recent
-

ஒரே ஒரு மாணவிக்காக புதிய ரயில் நிறுத்தத்தை அறிமுகம் செய்த ரஷ்யா -


ரஷ்யாவின் வட மேற்கு பகுதியில் ஒரு பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கரினா கோஸ்லோவா (14) என்ற சிறுமி பள்ளிக்குச் சென்றுவர உதவுவதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-முர்மான்ஸ்க் ரயில் பாதையில் உள்ள போயாகோண்டா கிராமத்திற்கு புதிதாய் ரயில் சேவையை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறுமி கரினா கோஸ்லோவாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா ஒரு முன்னாள் நர்சரி பள்ளி ஆசிரியர். இவர் தினமும் தனது பேத்தி பேத்தி கரினா உட்பட, பிற பகுதியின் மற்ற குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காகக் அனுப்ப சுமார் 10 ஆண்டுகளாக நீண்ட தூரம் பயணம் செய்து வந்தார்.
''தினமும் கியாசியா ரயில் நிலையத்திற்குச் செல்லும் ரயிலைப் பிடிப்போம். வழியில் வரும் குழந்தைகளையும் உடன் அழைத்துக்கொள்வோம். பிறகு பள்ளி பேருந்தில் மாறி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வார்கள்.'' என்று கூறுகிறார் நடாலியா.

சிறிய கிராமமான போயாகோண்டாவில், 50க்கும் குறைவான குடும்பத்தினரே வசிக்கின்றனர். நடாலியாவால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரே மாணவி கரினா மட்டுமே.
ரயில்வே ஊழியர்களை ஏற்றிக்கொள்ளவும், அவர்களை இறங்கிட மட்டுமே முன்பு இங்கு ரயில்கள் நின்றன. இதற்காக நிற்கும் ரயில்களை விட்டால், நடாலியாவுக்கு வேறு வழியில்லை. இதனைத் தவறவிட்டால், சிறுமி கரினாவால் பள்ளிக்குச் செல்ல முடியாது.

நடாலியா தினமும் சிறுவர்களுடன் 3 மணிநேரம் பயணம் செய்து காலை 7.30 மணிக்கு வரும் ரயிலில் பள்ளிக்கு செல்லும் இவர்கள், இரவு 7.10 மணிக்கு வரும் ரயிலில் மீண்டும் ஊர் திரும்பும் இவர்கள் வீடு வந்து சேர இரவு 9 மணி ஆகும்.
புதிய ரயில் நிறுத்தத்தினால், இனி கரினா விடு திரும்புவதற்காக நெடு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.

ஒரே ஒரு மாணவிக்காக புதிய ரயில் நிறுத்தத்தை அறிமுகம் செய்த ரஷ்யா - Reviewed by Author on February 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.