உயிரோடு இருக்கும் பாட்டிக்கு இறுதிச்சடங்கு: அவரே கலந்து கொள்ளும் ஆச்சரியம்
டெர்பி நகரை சேர்ந்தவர் எத்தில் லெதர் (93), இவர் கடந்த 1925-ல் Surrey-வில் பிறந்த நிலையில் பின்னர் தனது பெற்றோருடன் டெர்பி நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அவருக்கு கடந்த 1943-ல் முதல் திருமணம் நடந்தது. பின்னர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் இரண்டாவது கணவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் உயிரோடு இருக்கும் லெதருக்கு வரும் 23-ஆம் திகதி இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் அதில் அவரும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த ஐடியாவை லெதரின் மகள் பவுலின் நீல் (73) விளையாட்டாக சில வாரங்களுக்கு முன்னர் கூறிய நிலையில் அதை நடத்த வேண்டும் என லெதர் கூறியுள்ளார்.
லெதர் கூறுகையில், என் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை.
அவர்கள் எனக்கு பிடித்த பாடலை நான் இறந்தவுடன் இறுதிச்சடங்கில் பாடவிருப்பதாக கூறினார்கள்.
இப்போது நானே அந்த பாடலை இறுதிச்சடங்கின் போது பாடவுள்ளேன் என கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் லெதரின் எட்டு சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், பேரன்கள், கொள்ளு பேரன்கள் என 30-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
உயிரோடு இருக்கும் பாட்டிக்கு இறுதிச்சடங்கு: அவரே கலந்து கொள்ளும் ஆச்சரியம்
![]() Reviewed by Author
        on 
        
February 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 13, 2018
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment