இரா. சம்பந்தன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
சட்ட ஒழுங்கினை ஒழுங்காக கடைப்பிடிப்பதன் மூலம் நீதியும் நேர்மையான தேர்தலை நடாத்த அதிகாரிகளுக்கு உதவுமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அற்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தேர்வுசெய்யும் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.
நாடு பூராகவும் இடம்பெறவுள்ள இந்ததேர்தலை எதிர்நோக்கியுள்ள இவ்வேளை, சட்ட ஒழுங்கினை ஒழுங்காக கடைப்பிடிப்பதன் மூலம் நீதியும் நேர்மையான தேர்தலை நடாத்த அதிகாரிகளுக்கு உதவுமாறு அனைத்துமக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஜனநாயக செயற்பாட்டில் தமக்குள்ள அர்ப்பணிப்பை நிரூபிக்கும் வகையில் அனைத்து மக்களும் இந்த தேர்தலில் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தேர்தல் நேரத்திலும் அதற்கு பின்னும் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இடையூறு இல்லாதவகையில் நடந்துகொள்ளுமாறும் நான் பொதுமக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கவிரும்புகிறேன்.
ஒன்றிணைந்தவர்களாக எமது வாக்குரிமையை பயன்படுத்துவதன் மூலம் வளமான இலங்கையை உருவாக்குவதில் எமக்குள்ள அர்ப்பணிப்பை வெளிக்காட்ட முன்வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரா. சம்பந்தன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
Reviewed by Author
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment