மன்னார் ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா.....
மன்னார் ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா
விடத்தல்தீவு பங்கின் கிளை ஆலயமாக அமைந்துள்ள ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா 31.01.2018 புதன்கிழமை காலை நடைபெற்றது.
விடத்தல்தீவு பங்குத் தந்தை அருட்பணி.செல்வநாதன் பீரிஸ் அவர்களின் தலைமையில் காலை 07.00மணிக்கு திருப்பலி நிறைவேற்றும் குருக்களையும், விடத்தல்தீவில் இருந்து பணி செய்யும் பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளையும் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களையும், ஏனைய விருந்தினர்களையும் ஆலய மக்கள் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவிழாத் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியின் முடிவில் திருவுருவ ஆசீரும் வழங்கப்பட்டது.விடத்தல்தீவு பங்குத் தந்தை அருட்பணி.செல்வநாதன் பீரிஸ் ஆலய அருட்பணிப் பேரவையோடு இணைந்து சிறப்பாக திருவிழா நடைபெற்றது.

மன்னார் ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா.....
Reviewed by Author
on
February 01, 2018
Rating:

No comments:
Post a Comment