நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம்! உயிரிழப்புக்கான காரணம் வெளியானது?
திருமண நிகழ்வு ஒன்றுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழக்கவில்லை எனவும், குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீதேவியின் இரத்த பரிசோதனை அறிக்கையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததும் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மது போதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நடிகை ஸ்ரீதேவி மூச்சுதிணறி உயிரிழந்திருக்கலாம் என டுபாய் நாட்டின் “கல்ஃப் நியூஸ்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம்! உயிரிழப்புக்கான காரணம் வெளியானது? 
 Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment