அண்மைய செய்திகள்

recent
-

ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் -


துபாயில் காலமான ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியலறை தொட்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர், ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பை கொண்டுவரப்பட்டது.
திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம் கொண்ட வில்லே பார்லே பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
2 மணிநேரத்துக்கும் அதிகமாக நடந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அனில் அம்பானி, ஷாருக்கான், சஞ்சய் தத், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.


ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் - Reviewed by Author on February 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.