உள்ளதை இழக்கின்றோம் உணர்வீரோ தமிழர்களே!
அரசியல் என்றாலே தமிழ் மக்களுக்கு வெறுப்பும் கடுப்பும் ஏற்பட்டு விடுகிறது. அந்தள வுக்கு எங்கள் தமிழ் அரசியல் படுமோசமாகி விட்டது.
நீதியை, நியாயத்தைக் கதைப்பதற்கு ஆளில்லை. சொந்த அரசியல் இலாபத்துக்காக சிலர் ஓடித்திரிவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
இத்துணை அழிவுகள் ஏற்பட்ட பின்பும் தமிழினம் என்று சிந்திக்காமல் தமக்குத் தமக் குப் பதவி என்று ஆசைப்பட்டால், தமிழினத் தின் நிலைமை என்னவாகும் என்பதை சம்பந் தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ் அரசியல் என்பது தேவைப்படும். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழினம் குறைந்து வருகிறது.
அதிலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் ஆக்கிரமிப்பு சொல்லுந்தரமன்று. தமிழ் மக்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்று வது ஒருபுறம்; தமிழர்களின் நிலபுலங்களை அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்வது இன்னொரு புறமாக கிழக்கில் தமிழரின் இருப்பு நாளொருவண்ணம் பொழுதொருமேனி யாகக் குறைந்து வருகிறது.
அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையானுக்கு கிடைத்த வெற்றி என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி நாம் இழந்தது போதும் என்ற அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தங் களின் இருப்பைக் காப்பாற்ற பிள்ளையானுக்கு வாக்களித்தனர்.
இதிலிருந்து கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை இன்னு மொருபடி மேலானது என்பதை உணரமுடியும்.
வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன் னார் ஆகிய இடங்கள் இன்னும் சில வருடங் களில் முஸ்லிம் மக்களின் பிரதேசங்களாக மாறிவிடும்.
தவிர, யாழ்ப்பாணத்தில் கூட யாழ்ப்பாண நகரத்தில் முஸ்லிம் வர்த்தகர்கள் நடத்திய வியாபாரம் இப்போது எல்லை கடந்து வடம ராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தின் புற நகர்ப் பகுதிகள் என எங்கும் வியாபித்துள்ளன.
இவற்றையயல்லாம் கூறுவது முஸ்லிம் மக்கள் மீது எதிர்ப்புக் கொண்டோ அல்லது அவர்கள் மீதான காழ்ப்புணர்வோ அல்ல.
மாறாக தமிழினம் என்று நாம் பேசிக் கொண்டிருக்க தமிழர் தாயகம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை நம் அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் காட்டுவதே இதன் நோக்கமாகும்.
ஆக, எங்கள் நிலபுலங்களை பாதுகாக் கின்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
எங்கெல்லாம் நில ஆக்கிரமிப்பும் உட்பிர வேசமும் நடக்கின்றதோ அவைபற்றியயல் லாம் எங்கள் கவனம் திசை திரும்ப வேண்டும்.
அப்போதுதான் தமிழனின் வாழ்விடம்; இல் இடம் தப்பித்துக் கொள்ளும்.
எனினும் இந்த நினைப்புகள் எங்கள் தமிழ் அரசியல் தலைமையிடம் அறவே இல்லை என்பதால், தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புகள் இதுவிடயத்தில் அதீத கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாய தேவையாகும்.
-VALAMPURI-
உள்ளதை இழக்கின்றோம் உணர்வீரோ தமிழர்களே!
Reviewed by Author
on
February 24, 2018
Rating:

No comments:
Post a Comment