மதிக்கப்பட வேண்டிய சுத்திகரிப்பு பணியாளர்கள்....மனிதர்களாக.....
மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாக சுத்திகரிப்பு சுகாதார தொழிலாளராக கடமையாற்றிய கிறிஸ்த்துராஜா குமார்(சங்கர்) அவர்கள் நேற்றையதினம் 26-02-2018 காலமானார்.
இறப்பு பொதுவானது இதற்கிடையில்.......நாம்
மரணங்கள் இயல்பானதுதான் பலருடைய மரணங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்பட்டாலும் உதாரணமாக நடிகைகள் நடிகர்கள் அரசியல்வாதிகள் பணம் படைத்தவர்கள் நேற்று இறந்துபோன நடிகை ஸ்ரீதேவி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்றவர்களின் இறப்பினை மக்களும் ஊடகங்களும் முன்னுரிமை கொடுத்து வெளிப்படுத்தி காட்டினார்கள் அது போல
- சிரியாவில் ஏராளமான சிறுவர்கள் கொன்று குவிக்கப்பட்டுகின்றார்கள்.
- அதை யாரும் தடுக்க முன்வரவில்லை........
- வல்லரசு நாடுகள் தலைவர்கள் எங்கே
- மனிதம் எங்கே
- அதுபோல் இலங்கையில் இறுதி யுத்தத்தில் எத்தனை சிறுவர்கள் பொதுமக்கள் கொள்ளப்பட்டார்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் அதற்கான தீர்வு என்ன...........????
- இன்னும் சிலர் சிறு குற்றங்களுக்காக கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்படுகின்றார்கள் இவை யாரும் பெரிதாக கண்டுகொள்வதும் இல்லை....... கணக்கில் எடுப்பதும் இல்லை சில ஊடகங்களும் ஏனோ கவர்ச்சிக்கும் அழகுக்கும் விளம்பரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றதே தவிர மனித மாண்பு விழுமியங்களுக்கு உரிய மதிப்பளிப்பதில்லை கவலைக்குரிய விடையமே...!!!
விடையத்திற்கு வருவோம் சிலருடைய மரணங்கள் மட்டுமல்ல அவர்களுடைய தொழில்களும் அந்தஸ்தும் மக்களால் ஏற்றுக்கொள்ளபடுவதில்லை அவ்வாறானதொரு விடையமே இங்கு......
மன்னார் மாவட்டத்தினை பொறுத்தமட்டில் நகரை சுத்தமாக வைத்திருப்பதற்கு இவ்வாறான சுகாதார தொண்டர்கள் மழையிலும் வெயிலிலும் வீட்டிற்கே வந்து செயலாற்றுகின்றபணி அளப்பரிய சேவையினை யாரும் கணக்கில் கொள்வதில்லை அவர்களை ஏளனமாக பார்த்தலும் கிண்டல் கேலி செய்தலும் மனிதனாக மதிக்காத தன்மையினால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகின்றார்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை....
சுமார் ஓரிரு நாட்கள் இந்த சுகாதார சுத்திகரிப்பு பணியாளர்கள் வராவிட்டால் வீடு வளவு வாய்க்கால் வீதியே நாற்றம் வீச ஆரம்பித்துவிடும்.
எமது ஒரு வீட்டின் கழிவுக்குப்பைகளை சுத்தம் செய்யாமல் விட்டால் வருகின்ற நாற்றத்தினையே தாங்கிக்கொள்ள முடியாமல்...... மூக்கினை இறுக்கி பற்றிக்கொள்கின்றோம் இந்த தெருவில் நகரத்தில் எத்தனை வீட்டில் உள்ள அத்தனை கழிவுகளையும் சுத்தம் செய்பவர்களின் நிலையினை நாம் எண்ணிப்பார்த்திருக்கிறோமா...??????
ஒருகிழமை சேர்த்து வைத்த கழிவுகளை ஒரு நாள் வந்து அள்ளவில்லை என்றால் நாம் அவர்களை எவ்வளவு கோபத்துடன் திட்டுகின்றோம்...... பேசுகின்றோம்......
குப்பைக்காறன் வரவில்லை கொழுப்பு கூடிப்போச்சு இன்னும் வாய்க்கு வந்தபடி......
அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் வருத்தங்கள் துன்பங்கள் பிரச்சினைகள் இருக்கும் என்பதை மறந்துவிடுகின்றோம்.
இதைவிடக்கொடுமையான செயல் என்னவென்றால் இந்த சுத்திகரிப்பு பணியாளர்களை கண்டால் முகத்தினை சுழிப்பதும் முறைத்துக்கொண்டு திரும்புவதும் அருகில் வந்தால் விலகி செல்வதும் குடிக்க தண்ணீர் கேட்டால் கொடுக்க மறுப்பதும் இன்னும் ஏராளமான கீழ்த்தரமான செயற்பாடுகளை செய்கின்றவர்கள் எமது சமூகத்தில் எம்மத்தியில் வாழுகின்றார்கள் நல்ல மனிதர்கள் என்ற போர்வையில்...
"செய்யும் தொழிலே தெய்வம் என்றால்" அதை வெறுப்பதற்கும் பழிப்பதற்கும் இங்கே இடமேது........
மனித மாண்பு என்பதை பேச்சளவில் கொண்டு திரியாமல்
மனதளவில் நிறுத்தி செயலாக......
மனிதனாக திருந்தி வாழ்வோம்.
மலரும் சுத்தமாய் மனமும்...... நகரமும்......
மாற்றத்தினை விரும்பும் ஊடக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க......
-வை.கஜேந்திரன்-

மதிக்கப்பட வேண்டிய சுத்திகரிப்பு பணியாளர்கள்....மனிதர்களாக.....
Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment