வவுனியாவில் மூவர் கைது...
வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார் மூவரைக்கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 4கிலோ கேரளா கஞ்சாவினையும் 10மில்லி கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று சென்ற பொலிசார் அங்கு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது கணவன் மனைவி மற்றும் இவர்களுடைய நண்பன் ஆகிய மூவரையும் இன்று முற்பகல் கைது செய்துள்ளதாக பொலீசார்தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 4கிலோ கேரளா கஞ்சாவுடன் 10மில்லி கிராம் ஹெரோயினும் மீட்டுள்ளதாகவும் இவர்களை மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் மூவர் கைது...
Reviewed by Author
on
February 15, 2018
Rating:

No comments:
Post a Comment