04வது ஆண்டு கா.நல்லதம்பி ஞாபாகர்த்ததினத்தில் விளையாட்டுப்போட்டியும் கலை நிகழ்வும்
அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் 04ம் ஆண்டு ஞாபகர்த்ததினத்தை முன்னிட்டு சிறுத்தோப்பு கிராமசேவகர்பிரிவுக்குட்ப்பட்ட விளையாட்டு கழகங்களுக்குகிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (ஓவர்)மற்றும் கிராமமட்டத்தின் இளைஞர்-யுவதி-சிறுவர்கள் மற்றும் பெரிவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் காட்டாஸ்பத்திரி விளையாட்டுமைதானத்தில் 03.04.03.2018ம் திகதியின்று காட்டாஸ்பத்திரி ஜங்மேன் விளையாட்டு கழகத்தின் கொடியேற்றத்துடன் அவரின் நண்பர்கள் மற்றும் நலன் விருப்பியினரின் ஒத்துழைப்புன் ஆரம்பமானது.
குறித்தபோட்டியில் 7அணி பங்குபற்றிவிளையாடியது. இப்போட்டியின் பள்ளிவாசல் அணியிம் -காட்டாஸ்பத்திரி ஜங்மேன் A அணியும் இறுதிப்போட்டி அமரர்கா.நல்லதம்பி நினைவு தினமான 04.03.2018ம் திகதியின்றுபி.ப. 04.00 மணியளவில் காட்டாஸ்பத்திரிவிளையாட்டுமைதானத்தில் நண்பர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் வீரர்கள்அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றிவணக்கம் செய்யப்பட்டுஆண்கள்,பெண்களுக்கான மரதன் மற்றும் கரப்பந்தாட்ட ஆரம்பிப்பதற்கு பிரதமவிருத்தினராக கௌரவ.வைத்தியகலாநிதி ஞா.குணசீலன் வடமாகாணஅமைச்சர்,சுகாதார சுதேசமருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு மற்றும் கௌரவவிருந்தினர்கள் மதத்தலைவர்களான குருக்கள். பிரமஸ்ரீ.தர்மகுமாரசர்மா காட்டாஸ்பத்திரி வேளாங்கன்னி ஆலயபங்குத்தந்தை பள்ளிவாசல் மௌலவி மற்றும் எபினேசர்சபையின் பாஸ்டர். சந்தின் விருந்தினர்களாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம பிரதிநிதிகள் விருந்தினர்களின் முன் நிலையில் நடைபெற்றது.
இப்போட்டியில் காட்டாஸ்பத்திரி ஜங்மேன் A வெற்றியை தனதாக்கிகொண்டது. விருந்தினர்களினால் வெற்றிக்கானபரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்துகலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றது குறித்தபோட்டி மற்றும் நிகழ்வுகளுக்கு அனுசரனையாளராக நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள். ஆதரவு வழங்கியிருந்த்தனர்.
04வது ஆண்டு கா.நல்லதம்பி ஞாபாகர்த்ததினத்தில் விளையாட்டுப்போட்டியும் கலை நிகழ்வும்
Reviewed by Author
on
March 05, 2018
Rating:

No comments:
Post a Comment