பாலியல் கொடுமைகள் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராய் -
உலக அழகி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் முதலில் வருபவர் ஐஸ்வர்யா ராய் தான். அத்தனை அழகு நிறைந்த ஐஸ்வர்யா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவின் சிட்னியில் முகாமிட்டுள்ளார்.
அங்கு பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் ஹெர்வி மீதான குற்றச்சாட்டிற்கு பின் உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு பாலியல் வன்முறைகள் வெளிச்சத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி.
#MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி வருகின்றனர். சினிமா துறை என்று சுருக்காமல் அனைத்து துறைகளில் பணிபுரியும் பெண்கள் தாங்கள் சந்தித்த கொடுமைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
மிக இருண்ட பக்கங்களாக மனதில் தேக்கி வைத்திருந்த அந்த கொடுமைகள் குறித்து பெண்கள் மனம் திறந்து பேசுகின்றனர். இதன் மூலம் பெண்களுக்கும் நேர்ந்துள்ள கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது உண்மையில் மகிழ்ச்சி.” என கூறியுள்ளார்.
கடந்த வருடம் வெளியான பிரபல அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் ஹேர்வி குறித்த சர்ச்சைக்கு பின் தான் குறித்த ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலியல் கொடுமைகள் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராய் -
Reviewed by Author
on
March 28, 2018
Rating:
No comments:
Post a Comment