க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவி தற்கொலை - முல்லைத்தீவில் சோகம் -
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாத நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 5 பாடங்கள் மட்டும் சித்தி பெற்ற நிலையில், சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பரீட்சை முடிவுகள் வெளியானதை இட்டு பெறுபேறு குறைந்தமையினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவியான இவர் சிறந்த தலமைத்துவ பண்புகளைக் கொண்டவர் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவி தாய் -தந்தை இறந்த நிலையில் அம்மப்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம் .......இது வெறும் பரிட்சை முடிவுகளே தவிர வாழ்வுக்கான முடிவுகள் அல்ல...
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவி தற்கொலை - முல்லைத்தீவில் சோகம் -
Reviewed by Author
on
March 30, 2018
Rating:
Reviewed by Author
on
March 30, 2018
Rating:


No comments:
Post a Comment