மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்....படங்கள் இணைப்பு
மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று வியாழக்கிழமை15-03-2018 காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
மன்னார் பிரதேச பிரதேசச் செயலாளர் M.பரமதாசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர் K.K.மஸ்தான் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்,வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள
- கல்வித்திணைக்களம்
- மீன்பிடித்திணைக்களம்
- சுகாதாரத்திணைக்களம்
- விவசாயத்திணைக்களம்
- கமத்தொழில் அபிவிருத்தித்திணைக்களம்
- தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம்
- வீதி அபிவிருத்தித்திணைக்களம்
- வீதி அபிவிருத்தி அதிகார சபை
- பிரதேச சபை
- நகர சபை
- அரச கால்நடைத்திணைக்களம்
- இலங்கை மின்சார சபை
- தொழில்துறை திணைக்களம்
உள்ள பிரதான பிரச்சிணைகளான வீதி, சுகாதாரம்,குடிநீர்,போக்குவரத்து,பாதுகாப்பு,விவசாயம்,நன்நீர் மீன் பிடி,கால்நடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதோடு,குறித்த பிரதேசத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்ட சாரம்சமாய் நிறைய அபிவிருத்தி திட்டங்கள் போதிய நிதியில்லாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது வருத்தமான விடையம்
இதற்கான தீர்வு காணப்படவில்லை....
குறித்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் உற்பட மாதர்,கிராம அபிவிருத்திச் சங்கம்,கால்நடை,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு தாம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து குறித்த கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு- வை.கஜேந்திரன்
மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
March 16, 2018
Rating:

No comments:
Post a Comment