ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள்: என்ன விலை?
மறைந்த ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் திரையுலகில் இருந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
ஸ்ரீதேவி பற்றிய பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகி வரும் நிலையில், ஓவியம் வரைவதில் அவர் கில்லாடி என தெரியவந்துள்ளது.
அவர் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது இயற்கை காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்கள் படங்களை ஓவியமாக தீட்டி வைத்துள்ளார்.
அந்த ஓவியங்களை துபாயில் ஏலம் விட தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஸ்ரீதேவியின் ஓவியங்களுக்கான விலை பட்டியல் இன்னும் தெரியாத நிலையில் அனைத்தும் அதிக விலைக்கு விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள்: என்ன விலை?
Reviewed by Author
on
March 03, 2018
Rating:
No comments:
Post a Comment