தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம் -
தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.
பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே புதன்கிழமை 28.02.2018 உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் இலங்கையின் 2 முஸ்லிம் பெண்களில் ஒருவராகத் தெரிவாகி பயிற்சிகளை முடித்துக் கொண்ட பின்னர் இந்த நியமனத்தை அவர் பெற்றுள்ளார்.
இவரே ஊவா மாகாணத்தின் முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக நிர்வாக சேவைக்குத் தெரிவாகி சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம் -
Reviewed by Author
on
March 01, 2018
Rating:

No comments:
Post a Comment