யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு: கோத்தபாய கூறிய தகவல் -
யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு எனவும், அதனாலேயே ஜனாதிபதி அங்கு சென்று உரையாற்ற முடிந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரை, தான் ஆரம்பித்திருக்கவில்லை. எனினும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தோம். விடுதலைப் புலிகள் இல்லாமல் நாடு சிறப்பாக இருக்கின்றது.
படையினர் மாத்திரமன்றி, அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். யார் எதிரி, யார் நண்பன் என்றோ, பொதுமக்களின் வாகனம் எது, இராணுவத்தின் வாகனம் எது என்றோ குண்டுகளுக்குப் புரிவதில்லை.
நான் தவறெதனையும் செய்யவில்லை. சரியானதையே செய்தேன். எனக்குத் நன்கு தெரியும். என்னுடைய மனசாட்சி, அதைச் சொல்கிறது. போர் என்பது இலகுவான, நன்னம்பிக்கையுடைய விடயம் கிடையாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை காரணமாக, ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது. இன்று யாழ்ப்பாணம் சுதந்திரமானதொரு நாடு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு: கோத்தபாய கூறிய தகவல் -
Reviewed by Author
on
March 27, 2018
Rating:

No comments:
Post a Comment