அந்தப் பிஞ்சுகளின் அப்பாவுக்கு விடுதலை கொடுங்கள் ஐயா!
ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மனைவி கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் இறந்து போனார்.
கிளிநொச்சியில் அவரின் இறுதிச் சடங்கு கள் நேற்று முன்தினம் நடைபெற்றன.
மனைவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மூன்று மணித்தியாலங்கள் கணவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தந்தையோடு, இரண்டு சின்னஞ்சிறு பிள்ளைகள் இணை ந்து கொண்டனர்.
இளம் தாய் நோயினால் இறந்துபோக, தாளாத சோகத்தில் இருந்த அந்தப் பச்சிளம் பாலகர்கள் ஆயுட் தண்டனை அனுபவிக்கும் தம் தந்தையைப் பற்றிக் கொண்டனர்.
அனுமதிக்கப்பட்ட மூன்று மணித்தியாலங் கள் முடிகிறது. சிறைச்சாலை வாகனத்தில் தந்தை ஏறுகிறார்.
அவரைப் பின்தொடர்ந்த பச்சிளம் பாலகி தானும் அந்த வாகனத்தின் படிகளில் காலை வைத்து ஏற எத்தனிக்கிறாள்.
இந்தச் சம்பவம் அங்கு நின்ற அத்தனை பேரையும் நெக்குருக வைத்தது. இதற்கு மேலாக அந்தக் குழந்தையின் அவலம் கண்டு அங்கு நின்ற பொலிஸார் கூட கண்ணீர் விட்டு அழுதனர்.
அப்பா! எங்கள் அம்மா இறந்துவிட்டார். இனி எங்களுக்கு யார் துணை. உன்னையும் விட்டால் எங்கள் கதி என்ன? ஆகையால் உன் னோடு வருகிறேன் என்பதையே அந்தப் பாலகி யின் செயல் காட்டி நிற்கிறது.
இந்தச் சம்பவத்தை நினைக்கும்போதும் இதை எழுதும்போதும் கன்னத்தின் ஓரங்கள் நனைந்து கொண்டே இருக்கின்றன.
தாயை இழந்து தந்தையைப் பிரிந்து அந்த இரண்டு பச்சிளம் பாலகர்களும் எப்படி...?
கடவுளே! நீதான் காப்பாற்று என்று இதயம் ஒலித்துக் கொண்டாலும், தமிழர் என்பதால் எங்கள் அவலம் இது மட்டுமல்ல இன்னும்... இன்னும்... என்பதை நினைக்கும்போதெல் லாம் நெஞ்சம் கருகிக் கொள்ளும்.
ஓ! இந்த நாட்டின் மேன்மைதங்கிய ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன அவர்களே!
உங்களைத் தேடி வந்த சிறுமி ஒருவரை மடியில் இருத்தி மழலை மொழி கேட்டு மகிழ்ந் தது மட்டுமல்ல, அந்தப் பாலகியின் வீடு தேடிச் சென்று அந்தப் பிள்ளையுடன் அளவளாவி மகிழ்ந்திருந்தீர்களே.
இங்கு ஒரு பாலகி தாயைப் பறிகொடுத்து விட்டு தந்தையோடு சிறை செல்ல வாகனம் ஏறிய கதையை நீங்கள் அறியீரோ.
ஐயா! அந்தக் குழந்தைகளின் அவலத் தைப் போக்க வல்ல அதிகாரம் உங்களிடம் இருக்கிறது.
ஆகையால் ஆயுட்தண்டனை அனுபவிக் கும் அந்த இளம் தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி அந்த பிஞ்சுகளின் அவலத்தைப் போக் குங்கள்.
இதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம் பிக்கை யோடு கண்ணீரைத் துடைத்துக் கொள்கி றோம். அந்த பிஞ்சுகளின் அப்பாவுக்கு விடு தலை கொடுங்கள்.

Reviewed by Author
on
March 24, 2018
Rating:

No comments:
Post a Comment