மன்னார்-யாழ் பிரதான வீதியில் விபத்து-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மலேரியா தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி K.அரவிந்தன் பலி.(PHOTOS,VIDEO)
(இரண்டாம் இணைப்பு)
மன்னார்-யாழ் பிரதான வீதி பூநகரி ஜெயபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை 7-03-2018 மாலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மலேரியா தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரியான வைத்திய கலாநிதி கே.அரவிந்தன் என தெரிய வந்துள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று புதன்கிழமை (7) மாலை காரில் சென்று கொண்டிருந்த போது பூநகரி ஜெயபுரம் வீதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து மறுபுறம் வீதிக்கு அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது குறித்த காரினை ஓட்டிச் சென்ற வைத்தியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தற்போது அவரது சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
மன்னார்-யாழ் பிரதான வீதியில் விபத்து-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மலேரியா தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி K.அரவிந்தன் பலி.(PHOTOS,VIDEO)
Reviewed by Author
on
March 08, 2018
Rating:

No comments:
Post a Comment