மன்னார் சாந்திபுரம் அ.த.க பாடசாலையின் பெண் ஆசிரியருக்கு ஏற்பட்ட அவல நிலை-(படம்)
மன்னார் சாந்திபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் பெண் ஆசிரியர் ஒருவரை தொடர்ந்தும் அப்பாடசாலையின் அதிபர் பாடசாலை வரவு புத்தகத்தில் கையொப்பம் இட அனுமதிக்காததோடு, குறித்த வரவுப் புத்தகத்தை ஒழித்து வைத்து விட்டு தன்னை பாடசாலையில் இருந்து வெளியே அனுப்பியுள்ளதாக பாதீக்கப்பட்ட குறித்த பெண் ஆசிரியர் மன்னார் வலயக்கல்வி பணிமனை மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதீக்கப்பட்ட குறித்த பெண் ஆசிரியர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
மன்னார் சாந்திபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக கடமையாற்றி வருகின்றேன்.
கடந்த 20 ஆம் திகதி மதியம் எனது சம்பளத்திற்கான காசோலையை அப்பாடசாலை அதிபரிடம் கேட்டேன்.
-அப்போது நான் எடுத்த லீவுகளுக்கான விண்ணப்ப படிவத்தை தருமாறு கேட்டார்.
நான் உடனடியாக குறித்த லீவு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு சம்பள பணத்தை கேட்டேன்.
ஆனால் இன்னும் நான்கு விண்ணப்பங்கள் தர வேண்டும் என்றார் அதிபர்.
அவர் கூறிய படி நான்கு விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து விட்டு பதில் கடமை ஒப்பத்தை பெற்றுள்ள முடியாத நிலையில் ஆசிரியர்கள் எல்லாம் பாடசாலை முடிந்து வீடு சென்றமையினால் மறு நாள் பதில் கடமை ஒப்பமிட்டு தருகின்றேன் எனது சம்பள பணத்தை தாருங்கள் என அதிபரிடம் கூறினேன்.
அவர் தர மறுத்தார்.நீ எங்கும் போய் சொல்லு என அவர் என்னிடம் கூற நான் கூறினேன் எனது சம்பள பணத்தை தராமல் வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை என்று.
அதற்கு அவர் 'அடியேய் நீ வெளியே போடி' நீ ஒரு டீச்சராடி வெளியே போடி நாளைக்கு வா உணக்கு செய்யிரண்டி வேலை. என தகாத வார்த்தைகளினால் அவமானப்படுத்தும் வகையில் பேசி என்னை அடிக்க வந்தார்.
ஒரு கணவன் கூட தனது மனைவியை அநாகரிகமான முறையில் பேசுவதற்கு எமது நாட்டுச் சட்டம் உரிமை கொடுக்கவில்லை.
ஒரு பாடசாலையில் அதிபர் எவ்வாறு அவரின் கீழ் பணிபுரியும் ஆசிரியையை எவ்வாறு அநாகரிகமாக பேச முடியும்.
இப்பாடசாலை அதிபர் என்னுடன் நடந்து கொண்ட அநாகரிகமான செயற்பாட்டால் நான் உடல், உளவிய ரீதியாக மிகவும் பாதீப்படைந்துள்ளேன்.
நான் தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் அதிபரின் நடவடிக்கையினால் இன்று வரை கடமையாற்ற முடியாத நிலையில் உள்ளேன் என பாதீக்கப்பட்ட குறித்த பெண் ஆசிரியை தெரிவித்தார்.
மன்னார் வலயக்கல்விப்பணிமனை மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடுகளை செய்தும் யாரும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இவ்விடையம் தொடர்பில் உடனடியாக இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக பாதீக்கப்பட்ட குறித்த ஆசிரியை மேலும் தெரிவித்தார்.
மன்னார் சாந்திபுரம் அ.த.க பாடசாலையின் பெண் ஆசிரியருக்கு ஏற்பட்ட அவல நிலை-(படம்)
Reviewed by Author
on
March 29, 2018
Rating:

No comments:
Post a Comment