கொமடி ஜாம்பவான் நடிகர் செந்திலின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? -
தமிழ்சினிமாவில் கொமடி ஜாம்பவான்கள் என்றால் அது செந்தில், கவுண்டமணி தாங்க.. தற்போதும் இவர்களுடைய கொமடியினை ரசிக்காதவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள்.
தற்போது செந்தில் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய சொத்துமதிப்பு எவ்வளவு என்பதை தற்போது காணலாம்.
ராமநாதபுரத்தில் பிறந்த செந்தில் கலைச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் மருத்துவராகவும், மற்றொருவர் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்தும் வருகின்றார்.
செந்தில் ஆரம்ப காலத்தில் ஹொட்டலில் பரிமாறுபவராகவும், ஒயின்ஷாப்பிலும் வேலை செய்து வந்துள்ளார். சில நாடக மேடைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி சினிமாவில் நுழைந்தார்.
அத்தருணத்தில் இவர் ரூ.100, 50 என சம்பளமாக வாங்கி வந்துள்ளார். அதன்பின்பு கொமடியில் பெரும்புகழ்பெற்ற இவர் ரூ.1000 சம்பளமாக பெற்றுள்ளார்.
இவர் வைத்திருக்கும் இரண்டு சொகுசு கார்களின் விலை 70 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சினிமாவில் நடித்து சம்பாதித்த இவரது சொத்த மதிப்பு சுமார் 40லிருந்து 50 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொமடி ஜாம்பவான் நடிகர் செந்திலின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? -
Reviewed by Author
on
March 16, 2018
Rating:

No comments:
Post a Comment