தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்திருந்தால்...
கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்மம் இலங்கை யின் உள்ளார்ந்த நிலைப்பாடு என்ன? என் பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு நோயாளியை எக்ஸ்றே எடுத்தும் ஸ்கா னிங் செய்தும் நோயை நிர்ணயம் செய்வது போல, இலங்கை நாட்டை ஸ்கானிங் செய்து பார்த்தால்; அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த வன் செயல், இலங்கையில் இருக்கக்கூடிய பேரின வாத நோயை கண்டறிய முடியும்.
கண்டியில் முஸ்லிம் மக்களின் வீடுகளை யும் வர்த்தக நிலையங்களையும் எரியூட்டிய கொடுஞ் செயல் கண்டு இதயம் பதைபதைக் கிறது.
இந்த நாட்டில் தனித்துச் சிங்களவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்பதுதான் பேரின வாதத்தினதும் குறிப்பிட்ட பெளத்த பிக்குகளி னதும் நினைப்பாக உள்ளது.
காலத்துக்குக் காலம் பெளத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களைக் கொன்று குவி த்து அவர்களின் சொத்துக்களையும் கபளீ கரம் செய்ததன் காரணமாகவே தமிழ் இளை ஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் அரசாட்சி, ஜனநாயகம் என்ற பெயரால் அடிப்படைப் பிரச்சினைகளை மறைப் புச் செய்து; தமிழ் மக்களின் விடுதலைப் போராட் டத்தைப் பயங்கரவாதமாக பேரினவாத அரசு கள் வெளிக்காட்டி நின்றன.
இலங்கை ஆட்சியாளர்களின் சூழ்ச்சி களை நம்பிய உலக நாடுகள் இலங்கை அர சைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தின வேயன்றி, தமிழ் இளைஞர்கள் போராட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது ஏன்? தமிழ் மக் களின் விடுதலைப் போராட்டத்துக்குப் பின்பேனும் இலங்கை அரசு உரிமைப் பகிர் வைச் செய்ததா? என்பது பற்றி எந்தக் கவனிப் பையும் மேற்கொள்ளவில்லை.
ஆம், 2009ஆம் ஆண்டு வன்னி யுத்தம் முடிந்த கையோடு தமிழ் மக்களின் பிரச்சி னைக்கு முடிவுகட்டு; சிறுபான்மை இன மக்க ளின் உரிமையைக் கொடு என்று இலங்கை அரசுக்கு உலக நாடுகள் உத்தரவு பிறப்பித்து அதை நடைமுறைப்படுத்தி இருந்தால்,
இன்று அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல் நடந்திருக்க மாட்டாது.
ஆக, உலகநாடுகளின் அசமந்தப் போக்கும் சிறுபான்மை இன மக்களின் உரிமைசார் விட யத்தில் இருக்கக்கூடிய சர்வதேச சட்ட நியதி கள் உரியவாறு பின்பற்றப்படாமையும் சிறு பான்மை இன மக்கள் பேரினவாதம் கக்கு கின்ற தீயில் கருகிப் போவதுதான் விதியா யிற்று.
எதுஎவ்வாறாயினும் கண்டியில் நடந்த வன்செயல் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்பட வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
இதுபற்றி இனியேனும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்திருந்தால்...
Reviewed by Author
on
March 08, 2018
Rating:
Reviewed by Author
on
March 08, 2018
Rating:


No comments:
Post a Comment