மன்னாரில் நீர் விநியோகத்தில் தடங்கல் 130 மில்லியன் ரூபா செலவில் புரனமைப்பு பணிகள்....
மன்னார் முருங்கன் பகுதியிலிருந்து நீர் வடிகாலமைப்பு சபையால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் சில தினங்களாக குறைந்தளவு அமுக்கத்தில் நீர் விநியோகிக்கப்பட்டு வந்தமையால் அதிகமான பாவனையாளர்கள் மிகவும் பல அசௌரியங்களுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் நீர் வடிகாலமைப்பு சபை அலுவலத்தில் முறையீடு செய்து வந்துள்ளனர்.
இவ் நீர் விநியோகத்தில் வங்காலை, விடத்தல்தீவு, அடம்பன், திருக்கேதீஸ்வரம், மன்னார் நகரிலுள்ள அணைத்து கிராமங்களிலும் உள்ள பாவனையாளர்கள் இவ் பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை கவனத்துக்கு எடுத்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இவ் பிரச்சனையை உடன் தீர்க்குமுகமாக 130 மில்லியன் ரூபா செலவில் சிறந்த முறையில் நீர் வழங்கலுக்கான புனரமைப்பு பணிகளை வெள்ளிக் கிழமை முதல் (06.04.2018) மேற்கொண்டு வருவதாகவும் ஓரிரு தினங்களுக்குள் இவை சீர் செய்யப்பட்டு சிறந்த முறையில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் இதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நீர் விநியோகத்தில் தடங்கல் 130 மில்லியன் ரூபா செலவில் புரனமைப்பு பணிகள்....
Reviewed by Author
on
April 09, 2018
Rating:

No comments:
Post a Comment