2வருடம் வேலைக்கு போகாமல் இருந்த அபிஷேக்..
நடிகை ஐஸ்வர்யா ராய் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்த போதே நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் நடிப்பதையும் நிறுத்திக்கொண்டார். பல வருடங்கள் கழித்து தற்போதுதான் ஒன்றிரண்டு படங்களில் அவர் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது ஐஸ்வர்யா எப்படி தன்னிடம் ரியாக்ட் செய்தார் என அபிஷேக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
"நான் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தப்போவதாக கூறியபோது வீட்டில் அனைவரும் ஆதரவாக இருந்தார்கள். ஆனால் ஒரு வருடம் கழித்து பெற்றோர் வருத்தப்பட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஐஸ்வர்யா இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, எனக்கு ஆதரவாக இருந்தார்" என கூறியுள்ளார்.
தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் Manmarziyaan படத்தில் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2வருடம் வேலைக்கு போகாமல் இருந்த அபிஷேக்..
Reviewed by Author
on
April 29, 2018
Rating:

No comments:
Post a Comment